நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, May 11, 2019

போராட்டம் வெடிக்கும் என்று கூறி ஏமாற்றுகிறார்கள்… அவர்கள் வீடுகளில் பிரபாகரன் படம் உள்ளதா?


நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைகளை அடக்குவதற்கு வெளிநாட்டு தரப்பினர் தான் வர வேண்டும் என்றில்லை. எமது நாட்டின் பாதுகாப்பு தரப்புக்கு வன்முறையாளர்களை அடக்கிய பல அனுபவங்கள் உள்ளன. எனவே அவர்கள் மக்கள் நலன்சார்ந்து கடமைகளை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு பயங்கரவாத தடை சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிகையை நாம் பிழை என்று கூறமுடியாது. நாட்டில் பயங்கரவாதம் தலை தூக்கும் போது இவ்வாறான நடைமுறைகள் ஏற்படுவது வழமை. ஆனால் அந்த சட்டம் மனித தன்மையுடன் அமுல்ப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கை பாதுகாப்பு படையினருக்கு பல வன்முறை சம்பவங்களை அடக்கிய அனுபவங்கள் இருக்கின்றன. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைகளை அடக்க அவர்களே போதும். இதற்காக வெளிநாட்டி தரப்பினரின் உதவிகள் தேவை என்பதை ஏற்றிக்கொள்ள முடியாது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விசாரணை செட்டியப்பட வேண்டும். கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர்களும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களை உசுப்பேற்றி அரசியல் செய்பவர்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது அலுவலகத்திலோ தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்பு சாரந்தவர்களின் படங்களை வைத்திருப்பதில்லை. இந்நிலையில் மாணவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி சிறையில் தள்ளி விட்டனர். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் காலில் சிறிய முள்ளு குற்றினாலும் சர்வதேசம் வரவேண்டும் என்பார்கள். போலித் தேசியம் கதைத்து மக்களை உசுபேற்றி கொதிநிலையில் வைத்து அரசியல் செய்து வருகின்றனர். மக்கள் இதனை விளங்கிக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுத்தருவோம் என கூறி வந்தனர். இப்போது அது முடியாமல் போனதும் போராட்டம் வெடிக்கும், அங்கு வெடிக்கும் இங்கு வெடிக்கும் என கூறுகின்றனர். இது 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் என்றால் நாம் சிந்திக்கலாம். மக்களை பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றாது நடைமுறை சாத்தியமான விடயங்களை நாம் அணுக வேண்டும் என்றார்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!