நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, May 10, 2019

பயங்கரவாத பிரச்சினைகளின் பின்னால் மேலைத்தேய நாடுகளின் கரம்- காதினல்மேலைத்தேய சக்திகளுக்கு நாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டியுள்ளதாகவும் இவ்வாறு பிரச்சினையை ஏற்படுத்தாமல் அவர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய முடியாது எனவும் காடினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார்.

கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று (10) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இனங்களுக்கிடையே மூட்டி விடுவதன் ஊடாக இந்தப் பிரச்சினையை நாட்டில் ஏற்படுத்த அந்த நாடுகள் முயற்சிக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எமது நாட்டில் இரு இனங்களுக்கிடையில் கடந்த 30 வருடங்கள் யுத்தம் நிலவியது. நூற்றாண்டுகளாக சகோதரர்களாக வாழ்ந்த இரு இனங்கள் உயிர்களை இழந்தன. நாம் தமிழ், சிங்கள மக்களாக இருந்து மோதிக் கொண்டதன் ஊடாக அந்த மேலைத்தேய சக்திகளை பலப்படுத்தினோம். உலக வங்கியிடம் கடன் பெற்று நாம் ஆயுதம் கொள்வனவு செய்தோம். நாம் பிச்சைக்காரர்களாக மாறினோம். மேலைத்தேயர்கள் பணம் சம்பாதித்துக் கொள்கின்றனர்.

இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளும் அந்த ஒப்பந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகும். இதற்கு இஸ்லாமியர்களை தொடர்புபடுத்துவது தவறு. இஸ்லாம் மார்க்கத்துக்குள் இவ்வாறான நடவடிக்கையொன்றை முன்னெடுக்க அனுமதி இல்லையெனவும் அவர் மேலும் கூறினார்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!