நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, May 16, 2019

சஹ்ரானின் டி.என்.ஏ. அறிக்கை மூன்று நாட்களில் !உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான  சூத்திரதாரிகளில் ஒருவராக கருதப்படும் தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் தொடர்பிலான டி.என்.ஏ. பகுப்பாய்வு அறிக்கை  அடுத்து வரும் மூன்று நாட்க்களில் நீதிமன்றிடம் கையளிக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

ஷங்ரில்லா தாக்குதலின் பின்னர், அங்கு தற்கொலைதாரிகளில் ஒருவர் என சந்தேகிக்கப்படும் சஹ்ரான் ஹாஷிமின் தலைப்பகுதி பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அது சஹ்ரான் தான் என்பதை உறுதி செய்ய  டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட தீர்மனிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு கோட்டை நீதிமன்றம் ஊடாக பிறப்பிக்கப்பட்டது.

இந் நிலையில் சஹ்ரானின் டி.என்.ஏ. சோதனைக்காக அவரது மகளின் இரத்தமாதிரி, சகோதரியின் இரத்தமாதிரி ஆகியன அரச இரசாயன பகுப்பயவாளர் திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அரிய முடிகின்றது.