நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, May 15, 2019

தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வேனை கொள்வனவு செய்து அதில் ஆசனங்களை பொருத்திய சந்தேகநபர் காத்தான்குடியில் கைது!


கொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வேனை கொள்வனவு செய்துஇ அதில் ஆசனங்களை பொருத்தியதான குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர் பொலிசாரினால்கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய காத்தான்குடியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

புதிய காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் ஆதம் என்பவரே இவ்வாறு இன்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்;.
ஏப்பிரல் 21 ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொள்வதற்காக குண்டுதாரி பயணித்ததாக தெரிவிக்கப்படும் வேன் தேவாலயத்திற்கு அருகில் கடந்த 22 ஆம் தினதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் ,

பொலிசார் அதனை வெடிக்கச் செய்தனர்..அந்த வேளையில் இந்த வேன் வெடிக்க ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த நிலையில்பொலிசார், அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரினால் பாதுகாப்பாக வெடிக்க வைத்தனர்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!