நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, May 21, 2019

என் பிள்ளைகளுக்குக் காட்ட ஒரு சிறப்பான தலைவன் இருந்தான் என்ற நிம்மதியோடு வாழ்ந்துவிட்டுப்போகிறேன்-வைத்தியர் சிவச்சந்திரன்

Tuesday, May 21, 2019
Tagsதமிழர்களின் அரசியல் தெரிவு மிகவும் மோசமாக இருக்கின்றது என்று நான் பதிவிட்டால், 
நல்லவர்கள் யாரும் வருகிறார்கள் இல்லை இப்போது இருப்பவர்கள்தான் மீண்டும் வருவார்கள் அவர்களுக்குத்தான் வாக்குப்போடனும் என்கிறார்கள் சொம்புகள்.

நீங்கள் இப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி நல்லவர்கள் வருவார்கள்?

என்னைப்போல நீங்கள் எல்லோரும் " என் தலைவன் நேர்மையானவனாகவும், பொய் சொல்லாதவனாகவும், தமிழினத்தின் தேவையை கருத்திற்கொண்டு இனத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டு, பாராளுமன்றமே அதிரும்படி விவாவதத்தில் ஈடுபட்டு, உலக நாடுகள் வியந்து பார்த்து தலைவன் என்றால் இப்படி இருக்கனும் என்று சொல்லுபடியானவனாக இருக்க வேண்டும்" என்று ஆசைப்பட்டுப் பாருங்கள், புதியவர்களும் ஆளுமையானவர்களும் வருவார்கள். 

அதை விட்டுப்போட்டு சின்னச் சின்ன சுய லாபத்திற்காக தமிழினத்திற்காக சின்னதொரு விடயத்தைக்கூட பெற்றுக்கொடுக்குமளவுக்கு ஆளுமையற்றவர்களை தலைவர் என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டிருக்கும் உங்களைப்போன்ற தரம் தாழ்ந்த நிலைக்கு என்னை வரச்சொல்லாதீர்கள். என்னைப்பொருத்தளவில், நான் தலைவனென சொல்பவனுக்கு ஒரு தகுதி  வேண்டும். அப்படிப்பட்டவர் இல்லையென்றால், நான் தலைவன் இல்லாமலேயே வாழ்ந்துவிட்டுப்போவேன்.

என் எதிர்காலச் சந்ததியாவது, அப்பா கண்ட கண்டவனையெல்லாம் தலைவனென தூக்கி வைத்து அடிமையாக சுயகெளரவம் இல்லாமல் வாழவில்லை என்று உணர்ந்து அவர்களும் சுய கெளரவத்தோடு வாழட்டும். 

 தலைவன் இப்படித்தான் இருக்க வேண்டுமென என் பிள்ளைகளுக்குக் காட்ட ஒரு சிறப்பான தலைவன் இருந்தான் என்ற நிம்மதியோடு வாழ்ந்துவிட்டுப்போகிறேன், நீங்கள் உங்கள் கையாலாக முதுகு வளைந்தவர்களைத் தலைவரென்று உங்கள் பிள்ளைகளுக்கு காட்டி வளர்த்து விடுங்கள். அது உங்கள் இஷ்டம்.