நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, May 16, 2019

முஸ்லிம் சமூகம் விட்ட தவறுகளை சரி செய்ய தயார்- அமைச்சர் கபீர் ஹாசிம்

கடந்த காலத்தில் செயற்பட்ட விதம் தொடர்பில் முஸ்லிம் சமூகம் தம்மை சுய விசாரணை செய்து கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

கடந்த 21 தாக்குதலின் பின்னரான நிலைமை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (16) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இலங்கையர்கள் என்ற வகையில் சிங்கள கலாச்சாரத்துடன் இணைந்து செயற்பட வேண்டியுள்ளதாகவும், முஸ்லிம் சமூகம் சிங்கள சமூகத்திலிருந்து விலகி செயற்பட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் சமூகத்துக்குள் தவறுகள் இருக்கலாம். அவற்றை சரி செய்துகொண்டு இலங்கையர்கள் என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள் வெளியிலிருந்து புகுந்துள்ள அரபு சட்டங்கள், அந்த கலாசாரங்கள், மதுரஸா பாடசாலைகள் என்பன தொடர்பில் முஸ்லிம் புத்திஜீவிகள் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்