நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, May 17, 2019

அஞ்சலிக்கு தயாராக முள்ளிவாய்க்கால்: தற்போதைய நிலவரம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளன.

முன்னதாக பூசை வழிபாடுகள் முடிந்ததும், காலை 10.30 மணிக்கு நினைவுச்சுடர் ஏற்றப்படும்.

நினைவேந்தல் நடக்கும் பகுதிக்குள் செல்பவர்களை பொலிசார் பரிசோதனை செய்தே உட்செல்ல அனுமதிப்பார்கள்.

அதனால் தேவையற்ற பயண பொதிகளை நினைவேந்தல் இடத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லையென நேற்று பொலிசாருக்கும், நினைவேந்தல் குழுவிற்குமிடையில் நடந்த பேச்சில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது காலை 9 மணி நிலவரப்படி, பொதுமக்கள் இன்னும் அங்கு வந்து சேரவில்லை. நினைவிடத்தை சுற்றி பொலிசார், இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.