நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, May 8, 2019

மஹிந்தவின் கோட்டையில் சிக்கிய ஏழு தற்கொலை குண்டுதாரிகள்

காத்தான்குடியைச் சேர்ந்த ஏழு தற்கொலை குண்டுதாரிகள் மஹிந்தவின் கோட்டையான அம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சகோதரர்களில் ஒருவரே, இவர்களை அம்பாந்தோட்டைக்கு அழைத்து வந்துள்ளார்.

இவர்களுக்கு மிகவும் புத்திசாலித்தனமான முறையில் அம்பாந்தோட்டையில் ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி நீண்ட நாட்களாக அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு, மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலை நடத்திய மொகமட் நசார் மொகமட் ஆசாத், பயிற்சிகளை வழங்கி வந்துள்ளார்.

காத்தான்குடியில் இருந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றே இவர்களைக் கைது செய்து விசாரணைகளை நடத்தி வருகிறது.