நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, May 22, 2019

தற்கொலைதாரியுடன் தொடர்பு – பல்கலைக்கழக மாணவன் கைது

Wednesday, May 22, 2019
Tags


கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டல் தற்கொலை குண்டுதாரி இன்ஷாப் அஹமட் உடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக கூறப்படும் கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்கொலை குண்டுதாரியின் தொலைபேசியை சோதனையிட்ட போது கிடைத்த தகவல்களை அடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மற்றும் தற்கொலை குண்டுதாரி இன்ஷாப் அஹமட் ஆகியோருக்கிடையில் கையடக்கத்தொலைபேசி மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.