நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, May 16, 2019

உதவியை நானே தொடங்கி வைக்கிறேன்! பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிதியுதவி செய்யும் மாமனிதர்... குவியும் பாராட்டுகள்


இலங்கையில் இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகள் மீது சில தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நிதியுதவி வழங்க தொழிலதிபர் ஒருவர் முன் வந்துள்ளதோடு, மற்றவர்களும் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இலங்கையில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் சில தினங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள், வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு மசூதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் பலரின் உடைமைகள், பொருட்கள் சேதமடைந்தது.

இந்நிலையில் தனுஷ்கா டி சில்வா என்ற நபர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், டுவிட்டரில் உள்ள சிங்கள மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.

அழிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் சொத்துகள், உடைமைகளை திரும்ப பெற நிதி திரட்ட முடியுமா? நாம் தான் இதற்கு உதவ வேண்டும்.

நான் என் சொந்த பணத்தில் இருந்து ரூ 50,000 கொடுத்து இதை தொடங்கி வைக்கிறேன்.

நீங்களும் உங்களால் முடிந்ததை கொடுங்கள், ஒருவர் ரூ.1000 கொடுத்தால் கூட போதுமானது. என் பதிவு அதிக நபர்களிடம் சென்றடைய இதை பகிருங்கள் என பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து தனுஷ்காவின் மனித நேய செயலுக்கு டுவிட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!