onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Wednesday, May 22, 2019

மீண்டும் பிரதமராகிறார் மோடி; சரிந்துகொண்டிருக்கும் காங்கிரஸ்!

  admin       Wednesday, May 22, 2019


இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி தொடர்ந்தும் முன்னிலை வகிப்பதால் இந்தியாவின் பிரதமராக மீண்டும் மோடியே பொறுப்பேற்கவுள்லதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.

நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில் பாஜக 325 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் 107 தொகுதிகளில் பின்னடைவு கண்டுள்ளது. பெரும்பான்மையாக ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளை ப.ஜ.க. கைப்பற்றும் என வெகுவாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தமிழகத்தில் 36 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதன்படி திமுக 13 இடங்களிலும்,

அதிமுக 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

தொடர்ந்தும் இந்திய தேர்தல் சம்மந்தமான செய்திகளுக்கு எமது செய்திப் பிரிவுடன் இணைந்துகொள்ளுங்கள்!

logoblog

Thanks for reading மீண்டும் பிரதமராகிறார் மோடி; சரிந்துகொண்டிருக்கும் காங்கிரஸ்!

Previous
« Prev Post