நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, May 25, 2019

இறுதி யுத்தகால கசப்புக்களை போக்க முயற்சியுங்கள்: ஸ்டாலினுக்கான வாழ்த்தில் சொல்ல வேண்டியதை சொன்ன விக்கி!

Saturday, May 25, 2019
Tags


அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், இறுதி யுத்த காலப்பகுதியில் தி.மு.கவின் நடவடிக்கைகள் தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியும் நாசூக்காக சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த கடிதத்தில்,

அன்புள்ள மதிப்பிற்குரிய ஸ்டாலின் அவர்களே!

நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியை அபார வெற்றிக்கு வழிநடத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திராவிட முன்னேற்ற கழகம் உங்களின் தலைமையில் எதிர்காலத்தில் மேன்மேலும் வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து தமிழகத்துக்கும் உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் மகத்தான பணிகளை மேற்கொள்ளும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டபோது திராவிட முன்னேற்ற கழகம் செயற்பட்டவிதம் தொடர்பில் எமது மக்கள் மத்தியில் இன்றும் ஏமாற்றமும் மற்றும் கசப்புணர்வும் இருந்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் எமது மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் காத்திரமான நடவடிக்கைகளை நீங்கள் எதிர்காலத்தில் முன்னெடுப்பீர்கள் என்று நம்புகின்றேன். இதற்கு என்னாலான சகல உதவிகளையும் ஒத்தாசைகளையும் நான் வழங்குவேன்.

அத்துடன் எமது மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காகவும் எவ்வாறு தமிழகத்துக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கும் இடையே சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளை வலுப்படுத்தலாம் என்று ஆராய்வதற்காகவும் நீங்கள் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கின்றேன். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.