நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, May 24, 2019

இது எமது நாடு, யாரும் தலையிட வேண்டாம், நாம் இதனைத் தீர்ப்போம்- ஞானசார தேரர் சீற்றம்!

Friday, May 24, 2019
Tags


புர்கா, நிகாப் என்பவற்றையும் இந்த நாட்டில் காணப்படும் மத்ரஸாக்களையும் தடை செய்வதற்கு முஸ்லிம் சமூகத்தில் ஆலோசனை செய்யத் தேவையில்லையென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்தார்.

இன்று பொதுபல சேனா காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.

இது எமது நாடு என்ற உண்மையை விளங்கி தைரியமாக கூறுவதற்கு இந்த நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பு இல்லையெனவும் தேரர் விமர்சித்தார்.

அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்கு ஏற்ப இந்த நாட்டை அராஜகநிலைக்கு இட்டுச் சென்றுள்ளனர். தமக்குத் தெரியாத விடயங்களைக் கூறிக் கொண்டு திரியாது ஒரு ஓரமாக இருக்குமாறு இந்த நாட்டிலுள்ள தேரர்களுக்கும், ஏனைய குழுக்களுக்கும் சொல்கின்றோம். நாம் இதனை நிறைவுக்கு கொண்டு வருவோம் எனவும் ஞானசார தேரர் மேலும் கூறினார்.