நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, May 25, 2019

பள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்! இருவர் பலி! குவெட்டாவில் அச்சம்!

Saturday, May 25, 2019
Tags


பாகிஸ்தான் முக்கிய நகரமொன்றில் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான்பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலுள்ள பள்ளிவாசலொன்றிலேயே இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்ததுடன், 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது எனவும் குறித்த வெடிப்பு இடம்பெறும்போது பள்ளிவாசலுக்குள் சுமார் நூறு பேர்வரை தொழுகையில் ஈடுபட்டிருந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.