நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, May 24, 2019

ஹிஸ்புல்லாஹ்வின் குடும்பத்தின் பெயரில் உருவாகும் பாடசாலைகள்! பணம் எங்கிருந்து வந்தது?

Friday, May 24, 2019
Tags


காத்தான்குடியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் பாடசாலைகளுக்கு ஹிஸ்புல்லாஹ்வின் குடும்பத்தின் பெயரே சூட்டப்பட்டிருப்பதாக பா.உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

மேலும், அவ்வாறு நிர்மாணிக்கப்படும் பாடசாலைகளுக்கான நிதியும் சட்டவிரோதமாகவே கொண்டுவரப்பட்டிருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கல்வி வலயங்கள் இருக்கின்றன. அவற்றில் காத்தான்குடி கல்வி வயத்தில் புதிதாக 5 பாடசாலைகள் உட்பட மொத்தம் 8 பாடசாலைகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

அந்த பாடசாலைகள் அனைத்துக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் குடும்பத்தின் பெயர்களே சூட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கல்வி சம்பந்தமான மேற்பார்வை குழுவின் பரிசோதனைகளின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.