நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, May 15, 2019

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது என்று உரிமையாளர் ஏ.எஸ்.எம்.நௌஷாத் என்பவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏறாவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட தொடருந்து கடவைக்குஅருகாமையிலுள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீதே மூவரடங்கிய குழுவினர் பெற்றோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தினால் கார் முற்றாக எரிந்துள்ளது என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.