நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, May 1, 2019

முல்லைத்தீவில் படையினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது மீட்கப்பட்ட பொருட்கள்!முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் புதிதாக கட்டுமானப்பணிகள் இடம்பெறும் தனியார் ஹொட்டல் ஒன்றில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்றி பாவனைக்கு உட்படுத்திய ஒருதொகுதி உபகரணங்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைப்பிரிவினர் அளம்பில் பகுதியில் உள்ள புதிதாக கட்டுமானப்பணிகள் இடம்பெறும் தனியார் ஹொட்டல் ஒன்றில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே தொலைத்தொடர்பு கருவி உள்ளிட்ட பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது இராணுவ சப்பாத்துக்கள் 2சோடி, சீருடை, ஜக்கட் ஒன்று, தொலைபேசி சிம் அட்டைகள், கத்தி ஒன்று, தொலைநோக்கி கருவி ஒன்று, தொலைத்தொடர்பு கருவிகள் 9 என்பன படையினரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பான சட்டநடவடிக்கையினை முல்லைத்தீவு பொலிசார் முன்னெடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்