நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, May 23, 2019

இது பெளத்த நாடு அல்ல என்ற மங்களவின் கருத்து சரியானதே – அமில தேரர்

Thursday, May 23, 2019
Tags


இலங்கை ஒரு பெளத்த நாடு அல்லவெனவும் அது இலங்கையர்கள் அனைவருக்குமான நாடு எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்து உண்மையானது என பேராசிரியர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையற்றும் போதே தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் முஸ்லிம், கத்தோலிக்கர், இந்து ஆகிய அனைவரும் அவசரமாக முன்னே வர வேண்டும், தங்களுக்குரிய அடையாளங்களை இல்லாதொழிப்பதற்கு இடமளிக்க வேண்டாம்,

மேலும் அமைச்சர் மங்கள சமரவீர இது பெளத்த நாடு அல்ல என தெரிவித்துள்ளார். அவர் அந்த கருத்தை கூறிய நேரம் சரியில்லை என சிலர் கூறுகின்றனர், சரியாயின் ஒரு விடயத்தை அனைத்து நேரத்திலும் கூற முடியுமாக இருக்க வேண்டும் என பேராசிரியர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.