நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, May 25, 2019

சிவில் சமூக மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

Saturday, May 25, 2019
Tags


சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பவற்றின் ஒன்றிய பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (25) அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இந்த குழுவினர் வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது, கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பாக இப்பிரதிநிதிகள் பிரதமரிடம் தமது கருத்துக்களை விளக்கிக் கூறியுள்ளனர்.

இந்த சந்திப்பில், தம்பர அமில தேரர், கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, கலாநிதி பாக்கியஜோதி சரவணமுத்து, பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர, பேராசிரியர் எச்.டபிள்யு. சிரில், கலாநிதி ஜெஹன் பெரேரா, சமன் ரத்னப்பிரிய, சுனில் டி சில்வா, பிலிப் திஸாநாயக்க, சட்டத்தரணி நாமல் ராஜபக்ஸ உட்பட குழுவினர் கலந்துகொண்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.