நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, May 16, 2019

இலவச வீசா நடைமுறை மூலம் அமெரிக்காவிற்கு செல்ல முடியும் : ரணில் ஒரு தேச துரோகி


அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள 'சோபா' உடன்படிக்கையின் மூலமாக திருகோணமலை தொடக்கம் கொழும்பு வரையிலான பகுதிகள் அமெரிக்காவின் வர்த்தக வலையமாக அமையவுள்ளதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அமெரிக்க அரச திணைக்களம் வெளியிட்டிருந்த அறிக்கையில் விசா நிவாரண வேலைத்திட்டத்தில் இலங்கை நாட்டையும் இணைத்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது இலவச வீசா நடைமுறை மூலமாக அமெரிக்காவிற்கு பிரயாணம் செய்ய முடியும் என்பதாகும். 

அமெரிக்கா அரசாங்கம் இந்த இலவச விசா நிவாரணத்தை வழங்கியமைக்கான பிரதான காரணம், அமெரிக்கா இராணுவத்தினரை இலங்கை நாட்டிற்குள் அனுமதித்தமை மற்றும் அவர்களுடைய முகாம்களை இலங்கையில் அமைப்பதற்கான அனுமதித்தமை ஆகும்.

இதற்கான அனுமதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தேச துரோகி என்று இந்த நடவடிக்கையின் மூலமாகவும் அமெரிக்கா அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள சோபா உடண்படிக்கையின் மூலமாகவும் மேலும் ஒருபடி உறுதியாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!