நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, May 23, 2019

கண்டிக்கான போக்குவரத்தில் தடை; கடும் அவதியில் பயணிகள்!

Thursday, May 23, 2019
Tags


மலையகத்தின் ஹட்டன்-கண்டி பேருந்துச் சேவை இன்று காலையிலிருந்து தடைப்பட்டிருப்பதாக எமது நுவரெலியா செய்தியாளர் க.கிஷாந்தன் கூறுகிறார்.

தனியார் மற்றும் அரச பேருந்துச் சேவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாகவே இந்த போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இதுகுறித்து தெரியவருவதாவது, 

ஹட்டன் தொடக்கம் கண்டிவரை பயணிக்கும் அரச மற்றும் தனியார் பேருந்துகளை நாவலப்பிட்டி பொது பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தி முன்னதாக மோதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்த மோதல் சம்பவத்தையடுத்து ஹட்டன் தொடக்கம் நாவலப்பிட்டி பொது பஸ் தரிப்பு நிலையத்தின் ஊடாக கண்டிக்கு பயணிக்கும் தனியார்துறை பஸ் உரிமையாளர்கள் மற்றும் அரச போக்குவரத்து பேருந்துக்கள் இன்று காலையிலிருந்து போக்குவரத்து பணிபகிஷ்கரிப்பை ஹட்டன் மத்திய பஸ் தரிப்பு நிலையத்தினை மையமாக வைத்து ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால் ஹட்டன் தொடக்கம் கினிகத்தேனை, நாவலப்பிட்டி ஆகிய நகரங்களூடாக கண்டிக்கு செல்லும் தனியார் போக்குவரத்து சபைக்கான பேருந்துகளும் இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்துகளும் 

இந்த நிலையில் இன்று காலை முதல் அட்டன் தொடக்கம் கண்டி வரையிலான பயணிக்கும் அனைத்து பயணிகளும் பஸ் சேவையின்றி நிர்க்கதிக்குள்ளாகியுள்ள நிலையில், போக்குவரத்து அசௌகரியங்களுக்கு உள்ளாகியும் உள்ளனர்.

கடந்த காலங்களில் ஹட்டன் தொடக்கம் நாவலப்பிட்டி வழியாக கண்டிக்கு செல்லும் அனைத்து பஸ் சேவைகளையும் நாவலப்பிட்டி பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்த வேண்டாம் என்றும் மாற்று நடவடிக்கையாக நாவலப்பிட்டி பேருந்து தரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு முன்பாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாவலப்பிட்டி நகரில் உள்ள பயணிகளை குறித்த ஹட்டன் பகுதியிலிருந்து செல்லும் பேருந்துகளுக்கு ஏற்றவிடாமல் செய்யும் ஒரு சூழ்ச்சியாக இந்த விடயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணிகளுக்கு பரீட்சியம் இல்லாத இடத்தில் பேருந்து நிறுத்தப்படுவதால் பயன் எதுவும் இல்லை என பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மத்திய மாகாணத்தின் தனியார் போக்குவரத்தின் ஹட்டன் கிளை காரியலயத்திற்கு பொறுப்பான அதிகாரி பி.ஜீ. காமினி தலைமையிலான குழு ஒன்று நாவலப்பிட்டி மற்றும் ஹட்டன் பிரதான பஸ் நிலையங்களுக்கு உரித்தான அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்து சுமூகமான தீர்வு ஒன்று எட்டும்வரை இந்த போக்குவரத்து சேவையை தொடரப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.

குறிப்பாக ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டி பிரதான பஸ் தரிப்பு நிலையம் வழியாக கண்டிக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் நாவலப்பிட்டி பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தி செல்வதற்கான சுமூகமான தீர்வையே எட்டப்பட வேண்டும் என அட்டன் பிரதான பஸ் தரிப்பு நிலைய அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துச் சாரதிகளும், அதிகாரிகளும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது