நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, May 24, 2019

பெருமகனார் ஞானசாரர் வெளியே வந்து பணி தொடர்வதில் சைவர்கள் மகிழ்ச்சி அடைகிறோம்: சச்சிதானந்தம் சரவெடி அறிக்கை!

Friday, May 24, 2019
Tagsபெருமகனார் ஞானசார தேரர் சினந்து சொன்ன சில சொற்கள் இலங்கையின் சட்டங்களுக்குப் புறம்பானதென நீதிமன்றம் கண்டறிந்ததால் அவர் சில காலம் சிறையில் இருக்க நேரிட்டது. அவர் வெளியே வந்திருக்கிறார் மீண்டும் தன் பணியைத் தொடர்கிறார் என்பதில் சைவர்களாகிய நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என மிரட்டல் அறிக்கை வெளியிட்டுள்ளார் சிவசேனை அமைப்பின் மறவன்புலவு க.சச்சிதானந்தன்.

தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாக வண. ஞானசாசர தேரரை மன்னித்து விடுவித்த இலங்கை அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைக்கு அண்மையில் வந்தேறிய சமயங்களான கிறித்துவம் முகமதியம் இரண்டும் இலங்கையின் நெடுங்கால பாராம்பரியத்தைப் பேணுகின்ற சமயங்களான புத்தத்தையும் சைவத்தையும் தாக்கி மதமாற்றும் நோக்கம் கொண்டிருப்பன.

வந்தேறிச் சமயங்களான கிறித்துவம் முகமதியம் இரண்டிலிருந்து புத்த தேசியத்தை காக்க வேண்டும் என்ற முனைப்போடு செயற்பட்டவர் வணக்கத்துக்குரிய ஞானசாகர தேரர்.

நோக்கத்தில் தூய்மையாகச் செயற்பட்ட அப்பெருமகனார் சினந்து சொன்ன சொற்கள் இலங்கையின் சட்டங்களுக்குப் புறம்பானதென நீதிமன்றம் கண்டறிந்ததால் அவர் சில காலம் சிறையில் இருக்க நேரிட்டது.

அவர் வெளியே வந்திருக்கிறார் மீண்டும் தன் பணியைத் தொடர்கிறார் என்பதில் சைவர்களாகிய நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாக வண. ஞானசாசர தேரரை மன்னித்து விடுவித்த இலங்கை அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொது பல சேனையும் அதன் தலைவர் வண. ஞானசாகர தேரரும் அவரோடு இணைந்து கைகோர்த்துப் பணிபுரிகின்ற இலட்சக்கணக்கானோரும் இந்த மண்ணின் மரபைக் காப்பதற்கு முயற்சி செய்கின்ற மாபெரும் தொண்டர்கள். சைவ சமயத்தை வந்தேறிச் சமயங்கள் அழிப்பதில் இருந்து காக்கப் பொதுபல சேனை சைவர்களுக்குத் துணை நிற்கும் என நம்புகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.