நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, May 14, 2019

யாழில் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு! கூரிய ஆயுதங்களுடன் நபர் கைது!

கொக்குவில் காந்தி லேனில் சந்தேகத்துக்கு இடமான வீடு ஒன்றைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், அங்கிருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை மீட்டுள்ளனர். 

இராணுவத்தினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து இன்று காலை 6 மணிக்கு இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

அதனையடுத்து அந்த வீட்டில் உள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சோதனை நடவடிக்கை தொடர்பில் அந்தப் பகுதி மக்களுக்கு இராணுவத்தினரால் முன்னறிவித்தல் வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. 

வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவருடைய வீடே இவ்வாறு சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அங்கு வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் உரைப் பை ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகத் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.