நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, May 17, 2019

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக புத்தளத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்!

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் முஸ்லிம்கள் பாதையில் பெரும் ஊர்வலமொன்றை இன்று நடாத்தியுள்ளனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வீதியில் பதாதைகளுடன் வலம்வந்து, பின்னர் புத்தளம் கடல்ஓரப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அழிந்து போகட்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டதாகவும் சகோதர தேசிய ஊடமொன்று குறிப்பிட்டுள்ளது.

புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸ் மற்றும் புத்தளம் பிரதான முஸ்லிம் பள்ளிவாயல் உட்பட பல பள்ளிவாயல்களையும் சேர்ந்த ஜமாஅத்தாரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (17) ஜும்ஆ தொழுகையின் பின்னர் நடைபவணியாக வந்த முஸ்லிம்கள் கரையோரப் பகுதிக்கு வருகை தந்து சுமார் 2 மணி நேரங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 30 வருடங்களாக யுத்தத்தினால் அவதியுற்ற இந்த நாட்டு மக்களை மீண்டும் அந்த அழிவை நோக்கி திருப்ப நடவடிக்கை எடுத்துள்ள இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு சாபம் உண்டாவதாக என அனைத்து முஸ்லிம்களும் கூடிநின்று குரல் எழுப்பியதாகவும் அந்த ஊடகம் அறிவித்துள்ளது. 