நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, May 16, 2019

முகநூலில் நேரலை பதிவிடுவதற்கு வந்துள்ளது புதிய கட்டுப்பாடுகள்!நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் முகநூலில் நேரலை செய்யப்பட்டதை அடுத்து லைவ் வசதியில் கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முகநூல் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து நாட்டின் கிரிஸ்ட்சேர்ச் பகுதியில் 51 பேரின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தாக்குதல் நடத்திய நபரால் முகநூலில் நேரலை செய்யப்பட்டது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் லைவ் வசதியில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முகநூல் அறிவித்துள்ளது.

அதன்படி,முகநூலில் விதிமீறலில் ஈடுபடுவோர் லைவ் வசதியை பயன்படுத்த உடனடியாக 30 நாட்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும், தொடர்ந்து விதிகளை மீறுபவர்களுக்கு லைவ் வசதி நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் முகநூல் எச்சரிக்கை விடுத்துள்ளது.