நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, May 16, 2019

அமைச்சர் ரிஷாட் விடயத்தில், நான் தனிப்பட்ட தீர்மானம் எடுப்பேன்- காவிந்த எம்.பி.அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து கட்சியின் தீர்மானத்தின் படியும், விசேடமாக கத்தோலிக்க மக்கள் மற்றும் காதினல் ஆண்டகையின் ஆலோசனையின் பேரிலும் நான் தனிப்பட்ட வகையில் செயற்பட எதிர்பார்த்துள்ளதாக ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சியின் தீர்மானம் இதுவரை எவருக்கும் அறிவிக்கப்படவில்லை. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ன நோக்கத்தின் அடிப்படையில் கொண்டுவரப்படுகின்றது என்பது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும். கட்சியின் கருத்து என்ன என்பது குறித்து இதுவரையில் எந்தவித கலந்துரையாடலும் இடம்பெறவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த பிரேரணை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் முடிவு செய்யப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்