onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Tuesday, May 21, 2019

எதிரிக்கு மன்னிப்புஉண்டு...துரோகிகளிற்கு மன்னிப்பு இல்லை!சட்டத்தரனி செலஸ்ரின்!

  admin       Tuesday, May 21, 2019


ஆலயங்களில் எம் மக்கள் ஏன் சாகிறோம் என தெரியாமல் கொல்லப்பட்டு ஒரு மாதம் கடக்கமுன்னர் சம்பந்தனும் சுமந்திரனும் ரிசாத்தை காப்பாற்ற வேண்டும் என முடிவு எடுத்து, அதை ஏனைய TNA MP மார் மீது திணித்துள்ளார்கள். 
தமிழர் இறந்து கிடக்க,ஏனைய சமூகம் தமிழரை எள்ளி நகையாடும் விதமாக, ரிசாத்திற்கு முட்டுக் கொடுத்து, தமிழரின் இதயத்தில் விசஈட்டி எறிந்த இவர்களிற்கும் நரபலி எடுத்த சஹ்ரானிற்கும் என்னடா வித்தியாசம் இருக்கு?

”அல்லாகூ அக்பர் - அல்லா ஒருவனே கடவுள் ஏனையோர் காபீர்கள் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்ற சஹ்ரானின் அயோக்கிய பைத்தியக்காரத்தனத்திற்கும்”

“அரசியல் தீர்வு மட்டுமே ஒரே வழி ஏனைய தீர்வுகளான, தமிழரிற்கு தற்போது மிகவும் தேவையான வேலைவாய்ப்பு, நில பாதுகாப்பு, கல்வி வசதி, யுத்தத்தில் பாதிக்கப்பட்டோரிற்கான இழப்பீடு, வீடமைப்பு, கடன் வசதி, மாணவர்களிற்கான நிதிஉதவி, வீதி பராமரிப்பு, பட்டதாரிகளிற்கான வேலைவாய்ப்பு, அரச இயந்திரத்தில் தமிழரின் இன விகிதாசாத்திற்கு அமையவாவது இட ஒதுக்கீடு போன்ற தமிழரின் உடனடி பிரச்சனைக்கான தீர்வுகள் தேவையில்லை என்ற உங்களின் இருவரின் அயோக்கிய முட்டாள் தனத்திற்கும் என்னடா வேறுபாடு இருக்க முடியும்?

பருவத்தே பயிர் செய்...தேவையானதை அப்போதே கொடு...அதை தடுக்கும் நீங்கள் இருவரும் தமிழரால் கடும் சாபத்திற்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்பதை ஏன் உணருவதில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் பேசி விடயங்களை சரிப்படுத்த முடியும் என்பது எனது நம்பிக்கை...

ஆனால், சம்பந்தன் அப்படி அல்ல...பழமைவாய்ந்த சித்தாந்தங்களின் உறைவிடம்...இந்த சம்பந்தனும் ஒரு விதத்தில் அடிப்படைவாதிதான்...

தற்போதய நிலையில் இந்த “சம்பந்தன் அழிந்து, தொலைந்து, நாசமாய் போக வேண்டும் என தமிழர்கள் திட்டி சாபமிட்டு கொண்டிரிக்கிறார்கள்” என்ற உண்மையை சம்பந்தனிற்கு யாராவது சொல்லி விடுங்கள்.

தமிழர் போராட்டம் துரோகத்தால் வீழ்த்தப்பட்டதே தவிர, யுத்த சாணக்கியம் இன்மையால் தோற்கப்படவில்லை.

எத்தனையோ யுத்த தந்திரோபாயங்களை சாணக்கியங்களை பயன்படுத்தி, தமிழர் போராட்டம் இமாலய வெற்றிகளை வாரிக் குவித்திருந்தது. 

ஆனால், அரசியல் யுத்தத்தில் எதுவித சாணக்கியமும் தெரியாமல், தமிழரை தொடர்ந்து தனது முட்டாள்தனத்தால் அவமானப்படுத்திவரும் சம்பந்தனால் நாம் தொடர்ந்து துன்பப்பட முடியாது. அதற்கு துணைபோகும் சுமந்திரனின் சயநலபித்திக்கும் ஒரு அளவு வேண்டும்.

“தமிழர் அனைவரும் முட்டாள்கள் சுமந்திரன் மட்டும் புத்திசாலி என சுமந்திரன் நினைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.”

ஒன்றை மட்டும் உறுதியாக கூறுகிறேன்.

எதிரிக்கு மன்னிப்பு உண்டு...
துரோகிகளிற்கு மன்னிப்பு இல்லை...

தமிழருடன் போரிட்ட சிங்கள தலைமைகளை தமிழர்கள் மன்னிக்கலாம்...மன்னிக்காமலும் விடலாம்.

ஆனால், தமிழரிற்கு துரோகம் செய்த ISIS பயங்கரவாதகளையும் அந்த பயங்கரவாதகளற்கு துணைபோனதாக அனைத்து மக்களாலும் கூறப்படும் ரிசாட், ஹிஸ்புல்லா போன்ற விச ஐந்துக்களையிம், இந்த விச ஐந்துக்களிற்கு துணைபோகும் சம்பந்தன் சுமந்திரன் ஆகிய உங்களையும் தமிழர் மன்னிக்கவே மாட்டார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

தமிழரால் தற்போது அதிகம் வெறுக்கப்படுவது மகிந்தவோ கோட்டாவோ அல்ல என்பதையும் அருவருப்பான பூச்சிகள் போல தமிழர்கள் தற்போது பார்ப்பது சம்பந்தன் சுமந்திரன் ஆகிய உங்கள் இருவரையும்தான் என்ற உண்மையை இனியாவது நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

21.04.2019 அன்று குண்டுகளை வெடிக்க வைத்து பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அத்தனை உயிர்களிற்கும் எனது அஞ்சலியை உருத்தாக்குகிறேன்.

21.05.2019
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! எதிரிக்கு மன்னிப்புஉண்டு...துரோகிகளிற்கு மன்னிப்பு இல்லை!சட்டத்தரனி செலஸ்ரின்!

Previous
« Prev Post