நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Monday, May 13, 2019

இராணுவத் தளபதியினால் விடுக்கப்பட்டுள்ள விசேட செய்தி! வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக இராணுவம் தமது முழு அதிகாரங்களை பயன்படுத்தும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார் . இராணுவத் தளபதியினால் விடுக்கப்பட்டுள்ள விசேட செய்தியிலேயே இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார் . 

தற்போது படையினர் நாட்டில் முழுமையான அமைதியை ஏற்படுத்தியுள்ளனர் . ஒரு சிலரின் செயற்பாட்டினை கட்டுப்படுத்த இராணுவத்தினர் அதிகாரத்தை பயன்படுத்தி வருகின்றனர் தேவை ஏற்படின் ஏனைய பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து தமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார் .