நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, May 21, 2019

இரண்டு திருமணம் தவறின் சிறைத்தண்டனை! ஆண்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு?

Tuesday, May 21, 2019
Tagsஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சுவாசிலாந்து நாட்டில் ஒவ்வொரு ஆணும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும், இல்லையென்றால் அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசர் அறிவித்துள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளும் வந்த வண்ணம் இருந்தன.

ஆபிரிக்க கண்டத்தில் உள்ள ஒரு சில நாடுகளில் இதுபோன்ற நடைமுறைகள் இருப்பதால், சுவாசிலாந்தில் இந்த அறிவிப்பின் தாக்கம் பெரிதாக இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், சமூக வலைதளத்தில் எழுப்பப்படும் கருத்துகளுக்கு அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதுபோன்ற ஒரு அறிவிப்பை தான் வெளியிடவில்லை என்று அந்நாட்டின் அரசர் மஸ்வாதி கூறியுள்ளார். இது தொடர்பாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் ட்விட்டரிலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

சுவாசிலாந்து நாட்டில் உள்ள ஆண்கள், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அரசர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.