நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, May 14, 2019

காத்தான்குடி நோக்கி விரைந்த விசேட அதிரடிப்படை! சட்டவிரோத பொருட்கள் பல மீட்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா கிராமத்தில் ஒரு துப்பாக்கி மற்றும் ரவைகள் , கத்தி போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு கைக்குண்டுகளும் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று பிற்பகல் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கிராமத்தில் உள்ள குப்பை போடும் இடத்தில் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பகுதிக்கு விரைந்து சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காத்தான்குடி பொலிஸாரும் இணைந்து சம்பவம் தொடர்பானமேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் காத்தான்குடி முதலாம் பிரிவு வாவிக்கரை வீதியில் எள்ள களப்பு பகுதியை சோதனையிட்டபோது அங்கிருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும், 5 மகசீன் துப்பாக்கி ரவைகள்,கைக்குண்டு ஒன்று,வாள் 2, கத்திகள், தொலை நோக்கு கருவி ஒன்று உள்ளிட்டவற்றை மீட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் மற்றும் குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினரால் இரண்டு குண்டுகளும் செயலிழக்கச்செய்யப்பட்டுள்ளன எனவும் தெரியவந்துள்ளது.


நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!