நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, May 11, 2019

புர்கா அணியுமாறு அச்சுறுத்திய சஹ்ரான்! பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் மனைவி அம்பலப்படுத்தும் தகவல்கள்!தொடர் தற்கொலை குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சாய்ந்தமருது தாக்குதலின் போது சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் உயிர் தப்பினர். தற்போது கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதன்போது பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது சஹ்ரான் மற்றும் கூட்டாளிகள் தொடர்பான பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

சஹ்ரான் தற்கொலைத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் தன்னுடன் கொழும்பில் தங்கியிருந்தார் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...

கொள்ளுப்பிட்டியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்தோம். கடந்த 18 ஆம் திகதி அதிக நேரத்தை எங்களுடன் செலவிட்டார். வழமைக்கு மாறாக மகளுடன் அதிக நேரம் விளையாடினார். இதன்போதுதான் ஜிஹாத் ஆகப்போவதாக தெரிவித்தார்.

என்னை பிறிதொரு இடத்தில் கொஞ்ச நாளைக்கு இருக்கச் சொன்னார். எனினும் அவரின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நாரம்மலையில் உள்ள எனது வீட்டில் விடுமாறு கேட்டேன். அதற்கு அவர் உடன்படவில்லை.

பல தடவை அவரிடம் விவாகரத்துச் செய்யக் கூறியிருந்தேன். அவை கைகூடவில்லை. விவாகரத்து செய்ய மறுத்துவிட்டார்.

தற்கொலைத்தாக்குதல் நடத்தப்பட்ட அன்று நாங்கள் சாய்ந்தமருதில் இருந்தோம். எங்கள் கும்பல் தற்கொலை செய்துவிட்டதால் நாங்கள் வெள்ளை நிற ஆடைகளை அணிவோம் என்று ரிஸ்வானின் மனைவி என்னிடம் கூறினார்.

சஹ்ரான் இப்படிச் செய்தமை குறித்து கவலையடைந்த அவரின் தாயார் எதற்கும் கவலைப்படவேண்டாம் என எங்களை தேற்றினார்.

புர்காவை அணிவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் எங்கு சென்றாலும் புர்கா அணிந்து செல்லுமாறு சஹ்ரான் அச்சுறுத்துவார். நான் எங்கிருந்தாலும் என்னுடன் தொலைபேசியில் பேசுவார். புர்காவை அணிந்து செல்வது பாதுகாப்புக்கு உகந்தது என அடிக்கடி கூறுவார்.

என்னுடன் இருந்த சாரா மற்றும் பெரோசாவின் கணவன்மார்கள் தற்கொலைத்தாக்குதலில் இறந்தனர். அப்படி அவர்கள் இறந்தது பெருமையாக இருப்பதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர் - என விசாரணை அதிகாரிகளிடம் சஹ்ரானின் மனைவி தெரிவித்துள்ளார்.
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!