நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, May 24, 2019

பதுரலிய பாடசாலை குண்டுப் பொதி: ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது- பொலிஸ்

Friday, May 24, 2019
Tags


பதுரலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்ஹேன பிரதேச பாடசாலையொன்றுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டுப் பொதியுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுரலிய பாடசாலைக் கட்டிடமொன்றுக்கு அருகில் இருந்து 15 கைக்குண்டுகளை பதுரலிய பொலிஸார் நேற்றிரவு மீட்டுள்ளனர். இதனால், இன்றைய தினம் அப்பாடசாலையில் இராணுவத்தினர் பாரியளவில்  சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

பாடசாலை நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கு சதிகாரர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக இது இருக்கலாம் என கல்வி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இவ்வாறு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது