நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, May 23, 2019

ஆனந்தசுதாகரன் விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மை ஏன்?

Thursday, May 23, 2019
Tags


நீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுத்த அரசாங்கம், ஆனந்த சுதாகரன் விடயத்தில் எவ்வித கரிசனையும் காட்டாது உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அத்துடன் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் எமக்கு வேறு சட்டமும் என்ற வகையில் பாகுபாடாக நடந்துகொள்வது நியாயமானதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

சர்வதேச நாடுகளுடன் இலங்கை செய்துகொள்ளும் உடன்படிக்கைகள் மூலமாக நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தேசிய அச்சுறுத்தல் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் யார்?, அவர்களுடன் தொடர்பில் உள்ள அரசியவாதிகள் யார்? என்பதெல்லாம் தெரிந்தும் வடக்கில் சோதனைச் சாவடிகளை அமைப்பதும் மக்களை கஷ்டப்படுத்துவதும் நியாயமா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.