நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, May 22, 2019

வடக்கில் ஐ.எஸ் அமைப்பினர்: இராணுவ ஆட்சியை அமைக்கும் அரசாங்கம்! நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்

Wednesday, May 22, 2019
Tags


வட மாகாணத்தில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளை அவதானிக்கையில், ஐ.எஸ் ஆயுததாரிகள் வடக்கின் மீது தாக்குதல்களை நடத்தியதுபோன்று காட்ட முற்படுவதாக குற்றம்சாட்டியுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்த அரசாங்கம் முயல்வதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.

ஐ.எஸ் ஆயுததாரிகளுடன் தொடர்புகளை பேணியதாக குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் இரண்டு மாகாணங்களின் ஆளுநர்களின் பதவிகள் தற்காலிகமாகவேணும் பறிக்கப்பட்டு, அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் சிவசக்தி ஆனந்தன் ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பாதுகாக்க வேண்டிய தேவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், இரண்டு ஆளுநர்களை பாதுகாக்க வேண்டிய தேவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இருப்பதாகவும் குறிப்பிட்ட சிவசக்தி ஆனந்தன், முதலில் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இராஜாங்க அமைச்சர், விஜயகலா மகேஸ்வரன் கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் கருத்து வெளியிட்டதை அடிப்படையாகக் கொண்டு அவரது பதவியை பறிக்த்திருந்ததை சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், எனினும் இந்த விடையத்தில் அரசாங்கத்தின் செயற்பாட்டை பார்க்கும் போது அரசாங்கம் பாராபட்சமாக நடந்துகொள்வதையே எடுத்தியம்புவதாகவும் குற்றஞ்சாடடினார்.