நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Friday, May 24, 2019

கல்முனையில் திடீர் முற்றுகை: கிணற்றிலிருந்து பல சந்தேகப் பொருட்கள்!!

Friday, May 24, 2019
Tags


இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராகக் கருதப்படும் சியாம் என்பவர் தங்கி இருந்ததாக கருதப்படும் வாடகை வீடு கடும் தேடுதல் வேட்டைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

புலனாய்வுப் பிரின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து கல்முனை நகர மண்டபம் வீதியில் உள்ள சந்தேகநபரது வீட்டில் நேற்றிரவு 7 மணியளவில் கடுமையான தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டதாக தெரியவந்திருக்கிறது.

குறித்த சந்தேக நபர் கடந்த திங்களன்று (20-05) கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அதனையடுத்தே மேற்படி தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வீட்டில் அமைந்துள்ள கிணறு 2 மணித்தியாலங்களாக இறைக்கப்பட்டு அதிலிருந்து பல சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்கப்பட்டன.

எவ்வாறாயினும் குறித்த இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதுடன் மீட்கப்பட்ட பொருட்கள் பொலிஸாரால் கஒண்டுசெல்லப்பட்டன.

இதேவேளை நிந்தவூர், சாய்தமருது, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் தற்கொலைதாரிகள் தங்குவதற்கான வீடுகளை குறித்த சந்தேக நபரே வாடகை அடிப்படையில் பேசிக் கொடுத்துள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.