நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, May 11, 2019

யாழில் வடமராட்சியில் கொடூரம்: பிறந்த சிசு வீதியில் வீசப்பட்டது; நாய்கள் கடித்து குதறின!

வடமராட்சி துன்னாலை மத்தி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில் நேற்று இந்த சம்பவம் நடந்தது.

ஆள் நடமாட்டம் குறைந்த அந்த பகுதியில் உரப்பை ஒன்றை நாய் கடித்து குதறிக் கொண்டிருந்தது. இதை அவதானித்த பாதசாரிகள், உடனடியாக நெல்லியடி பொலிசாருக்கு அறிவித்தனர். நெல்லியடி பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டபோது, சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் இருந்தது. சிசுவின் கை கடித்து குதறப்பட்டிருந்தது.

பிறந்து சில மணி நேரமேயான சிசுவே வீதியில் வீசப்பட்டுள்ளது. சிசு உயிரிழந்த நிலையில் வீசப்பட்டதா அல்லது வீசப்பட்ட பின்னர் உயிரிழந்ததா என்பது தெரியவில்லை.

பொலிசார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.