நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, May 25, 2019

பிரிட்டனின் புதிய பிரதமர் ஜூலை இறுதிக்குள்

Saturday, May 25, 2019
Tags


பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து தெரேசா மே அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு போட்டி ஆரம்பமாகியுள்ளது.

இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் கட்சியின் தலைவராக மட்டுமின்றி பிரிட்டனின் அடுத்த பிரதமராகவும் பதவி ஏற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜூலை மாத இறுதிக்குள் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கப்படலாம் என   எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி தாம் பதவி விலகப் போவதாக அறிவித்த தெரேசா மே, கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுக்கப்படும் வரை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை நான்கு வேட்பாளர்கள் இப்பதவிக்காக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. வெளியுறவுத்துறை செயலாளர் ஜெரிமி ஹண்ட, சர்வதேச மேம்பாட்டுதுறை செயலாளர் ரோரி ஸ்டூவார்ட, முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் போரிஸ் ஜான்சன், முன்னாள் வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் எஸ்தர் மேக்வே ஆகியோரே இந்த வேட்பாளர்கள் ஆவார்.

எனினும், இப்பதவிக்காக மேலும் பலர் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.