நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, May 25, 2019

யார் தமிழன்.?

Saturday, May 25, 2019
Tagsநான் நாளை முஸ்லீமாகவோ, கிருஸ்த்துவனாகவோ மாறினாலும் நான் தமிழன் தான் .. 
மதம் மாறிகொள்ளலாம்.. 
இனம் மாறவியலாது ..
மதமும் இனமும் ஒன்றல்ல ..
இனம் என்பது என் அம்மாவை போல. 
மதம் என்பது என் ஆசிரியரை போல.. 
தேவைப்பட்டால் வேறு ஆசிரியரை மாற்றிகொள்ளலாம்.. 
ஆனால் அம்மாவை ஒருபோதும் மாற்றவியலாது.. அதனால் இனத்தையும் மதத்தையும் குழப்பாதீர்கள்..
மதம் என்பது 
நம்மை நல்வழிபடுத்துவதற்கும் 
வாழ்வியல் நெறிமுறைகளை 
கற்று தந்து கடவுள் பயத்தோடு ஒழுக்கமாக வாழ்வதற்கு தான் 
மதமே தவிர இனத்திற்கும் மதத்திற்கும் சம்மந்தமில்லை 

சீக்கிய மதத்தில் 
இருந்தாலும் தமிழன் என்றுமே 
தமிழன் தான்.. 
சில அறிவாளிகள்
கிருஸ்த்துவர்கள் தமிழனா 
முஸ்லீம்கள் தமிழனானு 
கேட்கிறாங்க.. 
முதல்ல இந்துக்களே தமிழன் இல்லபா.. 
தமிழனின் வழிபாடு இயற்கை வழிபாடு தமிழன் வழிபட்டதெல்லாம் நிலம்,நீர்,நெருப்பு,காற்று,
ஆகாயம் மட்டும் தான்.. 
இந்த இயற்கை வழிபாடுதான் 
தமிழனை இயற்கையை நேசிக்க வைத்தது.. வாயில்லா 
பிற ஜீவராசிகளின்
உணர்வுகளை அறிந்தவனாகவும், பிற உயிர்களிடத்திலிருந்து தான் 
தனக்காண வாழ்வியல் நெறிகளை கற்றவனாய் தமிழன்  இருந்தான் என்பதுதான் 
மறுக்க முடியாத உண்மை..

-முத்துக்குட்டி