நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Sunday, May 12, 2019

புர்கினா பசோ கிருஸ்தவ தேவாலயத்தில் ஆயுதம் தாங்கியவர்கள் துப்பாக்கிச் சூடு – 6 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பசோ பகுதியில் உள்ள கிருஸ்தவ தேவாலயத்தில் ஆயுதம் தாங்கியவர்கள்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பாதிரியார் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கி ஏந்திய 20 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க நபர்கள் இருவர் தேவாலயத்தில் ஆராதணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர்.

இதில் பாதிரியார் உட்பட் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
2016 முதல் புர்கினா பசோவில் ஜிஹாத் வன்முறை இடம்பெற்று வரும் நிலையில் கடந்த 5 வாரங்களில் இங்கு நடத்தப்படும் 3 ஆவது கிறிஸ்த்தவ தேவாலயம் மீதான தாக்குதல் இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.