நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, May 16, 2019

இலங்கை வான் பரப்பு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில்! விமான நிலையத்திலும் அதிஉயர் பாதுகாப்புஇலங்கை விமானப்படையினர் நாட்டின் வான் பரப்பின் பாதுகாப்பை தொடர்ந்தும் பேணிவருவதாக இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தெரிவித்தார்.

அதேசமயம் வான் பரப்பை பயன்படுத்தி எந்தவொரு அச்சுறுத்தல்களும் நாட்டிற்குள் வராமல் இருப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் விமானப்படையின் பங்களிப்பு தொடர்பாக நாட்டுமக்களுக்கு அறிவிக்கும வகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

விமான நிலையத்திற்கு வருகைதரும் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை முடியுமானளவு குறைக்கும் வகையில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன,மத பேதங்களின்றி பாடசாலைகள், சமயதளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஏனைய படைத்தரப்பினருடன் இணைந்து மேற்கொண்டுவருகின்றது. 

எனவே,எவ்வித அச்சமுமின்றி தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவைக்குமாறும் அவர்களது பாதுகாப்புக்கு படைத்தரப்பினர் உத்தரவாதம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!