நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, May 25, 2019

2000 வருடங்களிற்கு முற்பட்ட மயானம் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டது!

Saturday, May 25, 2019
Tagsதிருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கன்னியா நிலாவெளி வீதியில் வள்ளுவர்கோட்டம் பிரதேசத்தில் புராதன மயானம் கண்டுபிடிக்கப்பட்டதாக திருகோணமலை தொல்பொருள் தினைக்கள அதிகாரி சுமனதாச தெரிவித்தார்.

இந்த மயானம் சுமார் 2000 தொடக்கம் 2500 வருடகால பழமையானது என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது ஐந்து கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல கல்லறைகள் காட்டுப்பகுதியில் இருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது. அதில் இரண்டு கல்லறைகள் தோண்டிய நிலையில் காணப்பட்டன.

புதையலுக்காக அந்த கல்லறைகள் தோண்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது..

மேலும் தோண்டப்பட்ட கல்லறைகளில் ஒன்று சுமார் மூன்று மீற்றர் ஆழாமாக காணப்படுவதுடன் மற்றொன்றின் கற்கள் உடைக்கப்பட்டு அருகில் உள்ள வீட்டின் மதில் கட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டடுள்ளதை அவதானிக்க்கூடியதாக உள்ளது.