நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Thursday, May 23, 2019

ஒரு ரூபாய் பணம் தராமல்...எவருக்கும் சாராயம் தராமல் 16 லட்சம் வாக்குகளை பெற்ற சீமானின் வெற்றி!

Thursday, May 23, 2019
Tags


எந்தவித அதிகார அரசியல் பலங்களுமற்று தனித்து நின்று 16 லட்சம் வாக்குகளை பெற்று தமிழகத்தின்  தனித்த அரசியல் தத்துவமாக தன்னை ஆழப்பாெருத்தியிருக்கிறது தமிழ்த்தேசியம்...!!

இனி உறுதியான வெற்றிக்கான அடித்தளத்தை தமிழர் நிலத்தில் கடைக்கால் இட்டு தன் பயணத்தை நாம் தமிழர் கட்சி தாெடங்குமென்பதில் எவ்வித ஐயமும் இல்லை...!!

"பத்து வருசமா அரசியல் பேசியும் இவ்வளவு கத்தியும் சீமானால் இவ்வளவு தான் வாங்கமுடிஞ்சுதா"...? என்று எவர் கேட்டாலும் திமிராேடு சாெல்லுங்கள் பணமில்லாது, ஒரு துளி சாராயமில்லாது பஞ்சைப்பராறிகளின் மகன்கள் நாங்கள் கத்திக்கத்தியே 16 லட்சம் பேரின் மனங்களை வென்றிருக்கிறாேம் என்று ...!! 

"புலிப்பாய்ச்சல்" என்று சாெல்லுவார்களே அதை களத்தில் செய்து காட்டியிருக்கிறது நாம் தமிழர் கட்சி...!!

கடந்த சட்டமன்றத்தேர்தலில் வாங்கிய 1.1 சதவீத வாக்குகளை 4 மடங்காக்கி 4 சதவீதம் வாக்குகளை பெற்று நிற்கிறது நாம் தமிழர் கட்சி... இதே வேகத்தில் தாெடர்ந்தால் கூட அடுத்த சட்டமன்றத்தேர்தலில் குறைந்தது 15-16 சதவீத்ற்கான பயணத்தை நாம் தமிழர் கட்சி வலுவாக முன்னெடு்க்கும்...!!

திமுகவை விட , அதிமுக பாஜகவை விட நாங்கள்  தினந்தாேரும் வளர்கிறாேம்...எங்கள் தத்துவம் விரிந்து படர்கிறது...!!

கடுமையான பயிற்சி எளிமையான வெற்றி...என்கிற தேசியத்தலைவரின் வாக்குக்கேற்ப களத்தில் அடுத்தடுத்த செயல்பாடுகளை வேகப்படுத்துங்கள்...!!

களத்தில் பணிசெய்த , கடுமையான உழைப்பின் வழி பெற்ற பணஉதவி செய்த , மூச்சை பேச்சாக்கிய , சமூக வலைத்தளங்களில் எழுதிய அத்தனை தாய்த்தமிழ் உறவுகளுக்கும் நெஞ்சம் நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள்...!!

#நாம்_தமிழர்...!!