நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, May 1, 2019

தீவிரவாதிகள் தாக்குதல்:பாதுகாப்புபடை வீரர்கள் 15 பேர் பலி!மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில், போலிஸ் வாகனத்தின்மீது நக்ஸல்கள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் அந்த வாகனத்தில் பயணம் செய்தனர் என்று கூறப்படுகிறது.

பாதுகாப்பு படையை சேராத ஓட்டுநர் ஒருவரும் இதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இது சக்தி வாய்ந்த கன்னிவெடி தாக்குல் என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மஹராஷ்டிர மாநில முதலமைச்சரை தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை தெரிவித்ததாகவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்