நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Saturday, April 13, 2019

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பஸ் வண்ணடியில் (WP ND - 5448) யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு பயணிப்போருக்கு ஓர் அறிவித்தல்.

Saturday, April 13, 2019
Tags06/04/2019 மேலே குறிப்பிட்ட பஸ் வண்டியில் நான் எனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்தில் இருந்து   கொழும்பு (வெள்ளவத்தை) பயணித்தேன். வத்தளையை நெருங்கியதும் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி செல்ல இருக்கும் பயணிகளை பஸ் நடத்துனர் கணக்கு எடுத்தார்.  பின்னர் அவர் சாரதியிடம்   " வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி10 பேருதான் இருக்காங்க, வேற பஸ்ஸில  மாத்திவிடுவம்" என கூறினார்.

பின்னர் அதிகாலை 4.30 மணியளவில்  ஆமர் வீதியில் வைத்து ஈஸ்வரன் (யாழ் - கொழும்பு) பஸ்வண்டியில், சிறு குழந்தைகளுட்பட  என்னுடன் சேர்த்து இன்னும் 13 பயணிகளை   (வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி செல்லும் பயணிகளை)  மாற்றி ஏற்றினார்கள். நாம் எமது பயணப்பொதிகளுடன் மிக சிரமத்துடன் ஈஸ்வரன் பஸ்வண்டியில் ஏறினோம். அவ்வாறு ஏறும்முன் ரத்னா பஸ்வண்டி நடத்தினருடம் காரணம் கேட்ட பொழுது அவர் "தமது பஸ்வண்டியில் பழுதடைந்துவிட்ட்தாகவும், தேவைப்படின் முறைப்பாடு செய்யுமாறும்" அலட்சியமாக கூறினார். 

அவ்வாறு மாற்றி ஏற்றிய பயணிகள் சிலர் இருப்பதற்கு இடமில்லாமல் புளப்பியவாறும் நின்றுகொண்டே பயணித்தார்கள். அப்போது ஒருபயணி தான் இதற்குமுன்னரும் இவ் ரத்னா பஸ்வண்டியில் இருந்து வேறு பஸ்வண்டிக்கு இவ்வாறு மாற்றி ஏற்றப்பட்ட்தாகவும் தனது விசனத்தை  தெரிவித்தார். 

அதன் பின்னரே இதற்கான காரணத்தை இன்னுமொரு சக பயணி பின்வருமாறு எடுத்துரைத்தார். அதாவது குறிப்பிட்ட பஸ்வண்டி (ரத்னா) மட்டக்குழியிலேயே பயண முடிவில் நிறுத்திவைக்கப்படுவதாகவும், அதன் காரணமாக இவர்கள் தமது நேரத்தையும், வாகன எரிபொருளையும் சேமிக்கும் முகமாக பயணிகளை ஆமர் வீதியில் வைத்து வேறு பஸ்ஸில் மாற்றிவிடுவதாகவும் கூறினார்.  

வாகன எரிபொருளையும், தமது நேரத்தையும் சேமிக்கும் இவ் நடத்துனர் மற்றும் சாரதி அவ் பஸ்வண்டியில் பயணிக்கும் பயணிகளின் சவ்கரியத்தை பற்றி ஒருகணம் சிந்திக்க மறந்துவிடுகின்றார்கள்...!