நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 23, 2019

Update – வெடிக்கச் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளில் வெடிபொருட்கள் இல்லை- பொலிஸ்Update

வெள்ளவத்தையில் இன்று காலை 9.30 மணியளவில் குண்டு செயலிழக்கச் செய்யும் படையினரினால் வெடிக்கச் செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளில் எந்தவித வெடிபொருட்களும் காணப்படவில்லையென பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அந்த மோட்டார் சைக்கிளிலின் ஆசனத்தை திறக்க முடியாமல் காணப்பட்டதன் காரணமாகவே இவ்வாறு வெடிக்கச் செய்யப்பட்டு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

————————————–

வெள்ளவத்தையில் மோட்டார் சைக்கிள் வெடிக்கச் செய்ய நடவடிக்கை- பொலிஸ்

வெள்ளவத்தை சவோய் சினிமா அரங்குக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்று பாதுகாப்புப் படையினரால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளிலின் ஆசனத்தின் உள்ளகப் பகுதியை பரிசோதனை செய்ய முடியாத காரணத்தினால் படையினர் அதனை வெடிக்கச் செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 