நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Tuesday, April 16, 2019

இடி மின்னலில் இருந்து பாதுகாப்பு பெற !! வரும் நாட்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் மழை பெய்ய இருப்பதால் அதிகமாக பகிர்ந்து (share) உயிர்களை காப்போம்!
#படம்1:
வெட்ட வெளியாக இருந்தால் கூட்டமாக நில்லாமல் தனித்தனியாக நிற்கவும். முடிந்தால் 100 மீட்டர் இடைவெளி விட்டு கால்களை ஒன்றாக வைத்து நின்று கொள்ளலாம் அல்லது குத்துக் கால் வைத்து அமர்ந்து கொள்ளுங்கள்..

#படம்2:
மரத்தின் அடியில் நிற்க வேண்டாம். குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரம் அல்லது அதற்கும் அதிகமாக மரத்திலிருந்து தள்ளி நிற்கவும்

#படம்3:
கட்டிடங்களின் பக்கவாட்டு சுவர்களில் ஒதுங்கி நிற்க வேண்டாம். கட்டிடத்திற்கு உள்ளே இருப்பது பாதுகாப்பானது.

கார் போன்ற வாகனங்களில் உள்ளே இருக்கும்போது இடி மின்னல் வெட்டினால் வாகனத்திற்கு உள்ளேயே இருப்பது பாதுகாப்பானது. பயத்தில் வாகனத்தை விட்டு வெளியே வந்தால் நிலத்தில் பாயும் இடி மின்னலின் தாக்கம் நம்மையும் தாக்கும்.

உலோகங்கள், கூரியமுனையுடைய உலோகங்களுடன் தொடுகையில் இருப்பதை தடுக்கவும். மின் இணைப்புகளுடாகவும் அதிகாளவு மின்பாயயும் அபாயம் இருப்பதால் மின்சாதனங்களை அனைத்தோ அல்லது அதிலிருந்து விலத்தியே இருப்பது அவசியம்.