நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 17, 2019

M.A.சுமந்திரன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு புதுவழி தேடும் மக்கள் தலைவர்

Wednesday, April 17, 2019
Tags


பல விடயங்களில் பல தலைவர்களின் செயற்பாடுகளைப் பார்த்திருக்கிறேன். சின்னச் சின்ன விடயங்களுக்கு எல்லாம் உணர்ச்சி வசப்பட்டு தாமும் குழம்பி தம் சார்ந்தோரையும் பிரச்சனைகளுக்கு உள்ளாக்குகின்றார்கள். எப்போதும் கடந்தகால சம்பவங்களை நினைவு கூர்ந்து பழையதையே மீண்டும் மீண்டும் செய்ய முனைகின்றனர். இன்னும் சிலர் குட்டிக் குட்டி விடயங்களுக்கும் மிகவும் கடுமையான விமர்சனங்களை வைக்கின்றனர். மக்களை உணர்ச்சிக் குழம்பாக்கி, அதில் அரசியல் லாபம் தேடப் பார்க்கிறார்கள். 

ஆனால் சுமந்திரன் அவர்களின் ஒவ்வொரு நகர்வுகளையும் தெளிவாக அவதானிக்கின்றேன். சின்ன சின்ன விடயங்களுக்கு எல்லாம் சலனப்படுவதில்லை. விமர்சனங்கள் சிறியவையாக இருக்கலாம் மோசமானவையாக இருக்கலாம். அதையெல்லாம் அலட்டிக் கொள்ளமால் தனது செயற்பாடுகள் மூலம் பதில் தரும் பண்புகள் கொண்டவர். தன் இலக்கு மீது அலட்டிக் கொள்ளாமல் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர்.

சில நேரங்களில் நான் பிரமித்துப் போயிருக்கிறேன். எந்தவித குறிப்புகள், பாடமாக்கல் எதுவும் இல்லாமல் யாதார்தமாக பதில் தரக்கூடியவர். ஏனெனில் அது அவரின் அரசியல் அபிலாசைகள் நிரந்தரமாக பதிவாகிய ஒன்று.

ஜனரஞ்சக அரசியல் செய்து ஆளுக்கொரு கதை இடத்துக்கொரு கதை என அலட்டிக் கொள்பவர் அல்ல சுமந்திரன் அல்லது வாக்குகளை நம்பி அரசியல் செய்பவர் அல்ல இவர்.

குறிக்கப்பட்ட காலத்தில் பல நூறு வெளிநாட்டு பயணங்கள் பல இராஜதந்திரிகளின் சந்திப்புகள் மூலம் புதிய உலக ஒழுங்கை நன்கு புரிந்து கொண்டு, அந்த ஒழுங்கில் தமிழர் பிரச்சினைகளை இராஜதந்திர வழியில் நகர்த்தும் சுமந்திரன் ஒரு சிறந்த புத்திஜீவி.

பல திறமைகளை கொண்ட ஒருவரை, பல வழிகளிலும் படுகுழியில் தள்ளி விழுத்த சிலர் முனைந்தாலும், அவரின் சிறப்புகள் பல வகையிலும் பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது.

சுமந்திரன்
தமிழர்கள் தமது பிரச்சனைகளை கையாள பயன்படுததப்படும் ஒரு மந்திரச் சொல் என்பது திண்ணம்.

ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன்