நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 17, 2019

முதன் முதலில் யாழ்ப்பாணத்து பனங்கள்ளுசர்வதேச தரத்தில் கனடாவில் LCBO அனுமதியுடன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது .

Wednesday, April 17, 2019
Tagsசர்வதேச அரங்கில் யாழ்ப்பாணத்து பனங் கள்ளு.... 

இங்கே கள்ளை பொதியிட போத்தல்கள் கூட இருக்கவில்லை. ஏற்கனவே இங்குள்ள சாராய போத்தல்களை கழுவி தான் கள்ளை பொதியிட்டார்கள். லேபிளும் ஒழுங்காக இல்லை.

சுகந்தன் அண்ணா, இங்குள்ள சில சங்கங்களுடன் கதைத்து புதிய போத்தல்களை கொழும்பிலிருந்து எடுத்து, சர்வதேச தரத்துக்கு லேபிளையும் பிரிண்ட் பண்ணி, நவீன முறையில் தூய்மையாக கள்ளை பெற்று போத்தலில் அடைத்தார். கள்ளு மட்டுமல்ல பதநீர், பனம் சாராயம் போன்றவற்றையும் தர உத்தரவாதத்துடன் சர்வதேசத்துக்கு எடுத்து சென்றார். 

இப்போது Liquor Control Board of Ontario இன் அனுமதியுடன் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று இலங்கையின் முன்னணி ஹோட்டல்களில் எல்லாம் இவரது உற்பத்திகள் கிடைக்கின்றது. தனக்கென்று அர்ப்பணிப்பான ஊழியர்களுடன் சந்தைப்படுத்தல், மேம்படுத்தல் பிரிவுகளையும் வைத்திருக்கின்றார். 

அடுத்ததாக இவற்றை உற்பத்தி செய்யும் பிரிவுகளை பெரும்  தொழிற்சாலைகள் போல் உருவாக்கும் கனவுடனும் உள்ளார்.  

அரசாங்கத்தால் கோடிகளில் ஒதுக்கப்படும் பனை அபிவிருத்திச் சபை மற்றும் பனை சார்ந்த சங்கங்களால் முடியாதவற்றை தனியொருவராக நின்று செய்து காட்டியிருக்கிறார். 

இதற்காக இவர் பட்ட அலைக்கழிப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இங்கே ஒவ்வொரு இடத்திலும் பிரச்சினைகளை சந்தித்து வெற்றிகரமாக மீண்டார். 

சர்வதேச சந்தையில் வலம்வரும் கள்ளை வேற்று நாட்டவருக்கு அறிமுகப்படுத்துவதன் ஊடாக ஈழத்தில் பனையை நம்பி வாழும் சமூகங்களின்  வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற முடியும். 

கீழே உள்ள படங்களில் உள்ள போத்தல்களை பாருங்கள், பளிச்சிடுகிறது.... போத்தலில் இருந்து லேபிள் வரை நேர்த்தி தெரிகிறது. ஈழத்தின் தேசிய பானமான கள்ளு சர்வதேச அரங்கில் வலம் வருவது மகிழ்ச்சி.... 

இங்குள்ள பல சுயதொழில் முயற்சியாளர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வரும் இவர் இன்று சிறந்த சமூக முயற்சியாளராக திகழ்கிறார். 

ஏற்கனவே நிமிர்வு இதழுக்காக சில தடவைகள் இவருடன் கதைத்திருந்தேன். அந்தப் பதிவு கீழே, 

முதன் முதலில் யாழ்ப்பாணத்து பனங்கள்ளுசர்வதேச தரத்தில் கனடாவில் LCBO 
அனுமதியுடன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது .
First Time we Import "Jaffna Toddy" via LCBO