onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Tuesday, April 23, 2019

சற்று முன் புத்தளத்தில் பதற்றம்! மஸ்ஜித் வீதியை முற்று முழுதாக முற்றுகையிட்ட முப்படையினர்!

  admin       Tuesday, April 23, 2019


கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் தற்போது மிகவும் கெடுபிடி நிலவி வரும் நிலையில், தொடர்ச்சியாக கொழும்பில் அதிகளவில் வெடிபொருட்களும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனங்களும் பொலிஸாராலும் விசேட அதிரடிப்படையினராலும் முற்றுகையிடப்பட்டு குண்டுகள் செயலிழக்கச் செய்யப்படுகின்றன. 

அந்த வகையில், சற்றுமுன்னர் புத்தளம் மஸ்ஜித் வீதியில் உள்ள மின்மாற்றி மீது சந்தேகத்திற்கிடமான ஒரு பொதி இருப்பதை அறிந்த விமானப்படை மற்றும் பொலிஸார் அந்தப்பகுதியை சுற்றிவளைத்துள்ளனர். அத்துடன் குண்டு செயலிழக்க செய்யும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அந்தப்பகுதி படையினராலும் பொலிஸாராலும் முற்றாக சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது வெடிபொருட்கள் அடங்கிய பொதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சற்று முன் புத்தளத்தில் பதற்றம்! மஸ்ஜித் வீதியை முற்று முழுதாக முற்றுகையிட்ட முப்படையினர்!

Previous
« Prev Post