நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!

Wednesday, April 24, 2019

தற்கொலை தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் பார்க்கப்பட்ட ஒத்திகை! வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!


உயிர்ப்பு ஞாயிறு தினமான கடந்த 20ஆம் திகதி கிழக்கு உட்பட இலங்கையின் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

தற்கொலை தாக்குதல் நடைபெற ஓரிரு தினங்களுக்கு முன்னர் காத்தான்குடியை அண்டிய பகுதியில் தற்கொலைதாரி மோட்டார் சைக்கிளொன்றை வெடிக்க வைத்து ஒத்திகை பார்த்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

உயிர்ப்பு ஞாயிறு தினமான கடந்த 20ஆம் திகதி கிழக்கு உட்பட இலங்கையின் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு ஒத்திகை பார்க்கும் வகையிலேயே காத்தான்குடியில் மோட்டார் சைக்கிளொன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கிழக்கு மாகாண ஆளுநரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் முக்கிய கேந்திர நிலையமான காத்தான்குடியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள போதும் இதற்கு அவர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாதுகாப்பு தரப்பினரும் கூட இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அவ்வாறெனில் பல உயிர்களை காவு கொண்ட குறித்த சம்பவத்திற்கு முழு காரணமும் யார்?

அத்தோடு தற்போதைய ஆளுநரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கடந்த காலங்களில் நாடாளுமன்றில் உரையாற்றும் போது வெளிப்படையாகவே இரத்த ஆறு ஓடும் என கூறியிருந்தார்.

அப்படியெனில் அவர் ஓடுவதாக கூறிய இரத்த ஆறு இலங்கையில் ஈஸ்டர் தினமன்று இடம்பெற்ற குறித்த சம்பவங்களா?

எனினும் ஹிஸ்புல்லா இரத்த ஆறு ஓடும் என கூறிய போது, பொறுப்போடு செயற்பட வேண்டியவர்கள் இனக்கலரத்தை ஏற்படுத்த கூடாது என கூறி, அவரின் கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!